Arulmigu Shiva Shankara Jaya Kailasa Muneeswarar Peetham temple is managed by a non-profit organization registered with Registrar of Societies as Persatuan Penganut Sri Arulmigu Muneeswarar Alayam (Reg. No. 2393/96). The temple has been carrying out many religious and social activities to benefit the Hindu community residing around the vicinity.

Tuesday, 18 May 2021

🔥🌷மறக்கக் கூடாத குலதெய்வ வழிபாடு!🌷🔥

 


இப்போதெல்லாம், முன்பு போலில்லை. சனப்பெருக்கம், வேலைவாய்ப்பு என்று கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிப் படையெடுப்பது அதிகரித்துவருகிறது. அப்படி வந்து இங்கேயே தங்கிவிடும்போது, அடுத்த இரு தலைமுறைகளில் யார் குலதெய்வம் என்றே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது.
தெய்வத்திற்கு பொங்கல்வைத்துப் படையலிட்டு வந்து பாருங்கள்! நிச்சயம் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

🙏❣️🐎🌹🐎 என் கருப்பனே உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை என் கருப்பனே.🙏❣️🐎🌹🐎

 சிலருக்கு பணத்தின் ஆசை.

சிலருக்கு மது மீது ஆசை.
சிலருக்கு புகைபிடிப்பது மீது ஆசை.
சிலருக்கு வாகனத்தின் மீது ஆசை.
சிலருக்கு விலங்குகள்மீது ஆசை.
சிலருக்கு அரசியல் பதவிமீது ஆசை.
சிலருக்கு எலக்ட்ரானிக் பொருட்கள்மீது ஆசை.
சிலருக்கு தொழில்மீது ஆசை.
சிலருக்கு இயற்கை காட்சியின் மீது ஆசை
சிலருக்கு செல்போன் மீது ஆசை
என் கருப்பனே எனக்கு இவ்வளவு இருந்தும் எனக்கு எங்கும் எப்போதும் உன்மீது மட்டுமே ஒரு ஆசையாகவே இருக்கிறதே என் கருப்பனே
என் கருப்பனே உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை என் கருப்பனே.
ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவாகவே இருக்கிறேன் என் கருப்பனே.
இந்தக் குருசாமிகு ஒரு முகவரி தந்தவரே என் குலதெய்வம் கருப்பனே
என் தலைவிதியே மாற்றி அமைத்த என் குலதெய்வமே என் கருப்பனே

🙏❣️🐎🌹🐎 ஐயாவின் இந்தப் பார்வை🙏❣️🐎🌹🐎

ஐயாவின் இந்தப் பார்வை,
அருள் தரும் பார்வை
ஆனந்தம் தரும் பார்வை
இருள் நீக்கும் பார்வை
ஈர்க்கும் பார்வை
உன்னத பார்வை
ஊர் போற்றும் பார்வை,
எண்ணங்களைத் தீர்க்கும் பார்வை,
ஏற்றம் தரும் பார்வை,
ஐ என ஆச்சரியப்படுத்தும் பார்வை
ஒசந்த பார்வை
ஓங்கார பார்வை
ஐயாவின் இந்தப் பார்வை படும் இடம்
வாழ்வோம்,
நல்லா வாழ்வோம்,
தரமா வாழ்வோம்,
செழிப்பாக வாழ்வோம்,
சிறப்பாக வாழ்வோம்.
பார்வை படப் பாதம் தொடுவோம்.

🙏🔥🌹🐴பதினெட்டாம் படி கருப்பா.🐴🌹🔥🙏

 அந்தப் பதினெட்டுபடிக்கு படிக்கு மேல் நீங்கள் இருக்கும் அழகோ அழகு, அதைப் பார்க்கக் கண் கோடி பத்தாது

வீச்சருவா எடுத்துச் சுத்தும் அழகு அந்த வீரம் யாருக்கும் வராது.அந்த வீச்சில் காற்றும் தடுமாறும்...
காற்றை திசை மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் சுழற்றும் சாட்டையில் காற்றும் சுற்றும் உங்கள் சாட்டைக்கு ஏற்ப.
சுருட்டு வாசம் காற்றிலே பறந்து இங்கே என் அப்பன் கருப்பன் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் காட்டிவிடும்.
உங்களுக்குப் படையலாக வைக்கும் முன் அது வெறும் உணவே, வைத்தபிறகு அது பிரசாதம்.
அந்தப் பிரசாதத்தை வாங்க தவம் செய்திருக்க வேண்டும் நாங்கள்...சாப்பிட்டால் தீரும் நோய்கள்.
உங்கள் கழுத்தில் உங்களுக்குப் போடப்படும் மாலைகள் எங்களுக்குக் கிடைக்காதா என ஏங்குபவர் உண்டு.அதில் நானும் உண்டு
உங்கள் கையால் நீங்கள் தரும் எலுமிச்சை கனி, அது சாதாகனி அல்ல.பல வரங்கள் அருளும் தேவக்கனி...

Tuesday, 4 May 2021

🙏😇மலேசியா மற்றும் இந்தியாவுக்கான பிரார்த்தனை - ஆரோக்கியம் மற்றும் ஆறுதல் - கோவிட் -19. 😇🙏

 இரக்கமுள்ள கடவுளே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த ஜெபத்தைக் கேளுங்கள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கட்டும்உங்கள் குணப்படுத்தும் இருப்பு.

அவர்களின் பராமரிப்பாளர்கள், குடும்பங்கள் மற்றும் அயலவர்கள் பாதுகாக்கப்படட்டும் வைரஸின் தாக்குதலிலிருந்து. அன்புக்குரியவர்களின் இழப்பை வருத்தப்படுபவர்களுக்கு ஆறுதல் கொடுங்கள்.சிகிச்சையைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களைப் பாதுகாத்து வழிநடத்துங்கள், அவர்களின் பணி நோயை வென்று சமூகங்களை முழுமையுடனும் ஆரோக்கியத்துடனும் மீட்டெடுக்கக்கூடும்.

பயத்திற்கு மேலே உயர எங்களுக்கு உதவுங்கள். சிவபெருமானின் பரிந்துரையின் மூலம் இதையெல்லாம் கேட்கிறோம்,

நமசிவய நீண்ட காலம் live சிவன் வெற்றி சிவன் தவம் சிவன் சரணடைதல்.

அஸ்ஜ்



Saturday, 1 May 2021

🙏🔥☘️ பிரார்த்தனைகள் விரைவில் பலிக்க☘️🔥🙏

 ஒரு பிரார்த்தனை விரைவில் பலித்திட வேண்டும் என்றால் அதற்குப் பல இறையம்சங்கள் கூட வேண்டும்.

ஆலயங்களில் துவார பாலகர்களைப் பார்த்திருப்பீர்கள். உங்களுடைய பிரார்த்தனையானது சுயநலமாக, அதாவது குடும்பம், அலுவலகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக
இருந்தால் அதனை மூலஸ்தானம் வரைக்கும் எடுத்துச் செல்லாமல்
துவார பாலகர்களிடம் முதலில்
எடுத்துரைத்துப் பிரார்த்திக்க வேண்டும். ஏனென்றால் துவார பாலகர்களே ஜீவன்களுடைய எண்ணங்களைப் பகுத்து, வடிகட்டி அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப
பலித பாத்திரங்களில் நிரப்பி, பல தேவதா மூர்த்திகளின் மூலம் மூலவரிடம் சமர்ப்பிக்கின்றார்கள். எனவே “இறைவா! அனைத்தும் உன் செயலே! நீ அளிப்பதை ஏற்கின்றேன்'' என்ற தெய்வீகமான பிரார்த்தனையை
மட்டுமே மூல மூர்த்தியிடம் நாம் நேரிடையாகச் சமர்ப்பிக்கலாம். எனவே, முதலில் துவாரபாலகர்களை
நன்முறையில் வணங்கி உங்கள் பிரார்த்தனை பலித சக்திகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். சென்னை - கோயம்பேடு சிவாலய ருத்திர கபால துவாரபாலகர்கள்
மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்திகள் ஆவர்.


Friday, 30 April 2021

😇🌹🌹ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் கருப்பனே நம்பி கெட்டு போனவர்கள் இதுவரை யாரும் இல்லை 🌹🌹😇

 ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் கருப்பனே நம்பி கெட்டு போனவர்கள் இதுவரை யாரும் இல்லை அந்த வழியில் நானும்.

நமது ஐயா கருப்பசாமியின் எல்லை எதுவென்று யாருக்கும் தெரியாது எங்கை எல்லாம் உண்மையான பக்தர்கள் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் காவலாக இருக்கிறார் நமது ஐயா கருப்பன்.


சோதனையே கொடுப்பான் ஆனால் உன்னை ஒரு போதும் கைவிட மாட்டான் உன்னை ஒரு நிலையில் நிப்பாட்டி வைப்பான் நமது கருப்பன்
நமது ஐயா கருப்பன் பெரிய பெரிய பூஜைகள் எதிர்பார்க்க மாட்டான் உன்னால் முடிந்த அளவுப் பூஜைகள் செய்தாலே அதைச் சந்தோஷமாக ஏற்றிக் கொள்வார் நமது ஐயா கருப்பன்.
தான் பிள்ளைகளைப் பாதுகாக்கவே கம்மாகரையிலும் ஊர் எல்லையிலும் மரத்தடியிலும் மக்களோடு மக்களாகச் சேர்ந்து தான் பிள்ளைகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார் நமது ஐயா கருப்பசாமின்
தான் பிள்ளைகள் கூப்பிட்டவுடனே வெள்ளைகுதிரையில் வீச்சருவாளை பிடித்துக் கொண்டு சூரவாளி காற்று போல் வந்து காப்பவனே நமது கருப்பன்.
தான் பிள்ளைகளின் பாசத்துகக்கு மட்டுமே கட்டுபடுவான் நமது கருப்பன் ஆங்காரம் கொண்டு இருக்கும் நமது கருப்பன் தான் பிள்ளைகளைப் பார்த்தவுடனே சாந்தமாக மாறிவிடுவான் நமது கருப்பன்.
தான் பிள்ளைகளின் ஆட்டம் எல்லை மீறும்போது. நமது ஐயா கருப்பனின் ஆட்டத்தைக் காட்டுவார் நமது கருப்பன்.
சில மனிதர்களின் குணங்கள் மாறலாம் ஆனால் நமது ஐயா கருப்பனின் குணம் ஒரே மாதிரியே இருக்கும் நமது ஐயா கருப்பனின் பார்வை ஒரே பார்வை அது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாராமல் ஒரே மாதிரியே பார்க்கக்கூடிய நேர் கொண்ட பார்வை தான் நமது ஐயா கருப்பன் பார்வை.
உலகத்தை ஆள்பவர் சிவன் மக்களை ஆள்பவர் நமது ஐயா கருப்பன்

🙏😇👌நம்பிக்கையால் நடக்கும் அற்புதங்கள்👌😇🙏

 ஒரு பெண் தன் தோழியின் வீட்டிற்குச் சென்று, மாலை நேரம் திரும்பி வந்து கொண்டிருக்கும்பொழுது, கொஞ்சம் நேரமாகி விட்டது. தனியாக நடந்து வர வேண்டிய சூழ்நிலை ஆகியிற்று. சில வீடுகள் தள்ளித் தான் வசித்து வந்ததால் அவளுக்குப் பயம் ஒன்றுமில்லை.

வண்டி(பைக்) போகும் பாதையிலே செல்வி நடந்து சென்றாள். கடவுளிடம் அபாயம் ஒன்றும் இல்லாமல் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள்.
ஒரு குறுக்குச் சந்தில் சென்று கொண்டிருக்கும்போது, பாதை முடிகின்ற இடத்தில் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவளுக்காகக் காத்து கொண்டிருந்தான் போல் தெரிந்தது.
மன சஞ்சலத்துடன், கடவுள் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தாள். பாதை முடிவிற்குச் சென்றவுடன், நின்று கொண்டிருந்த மனிதனைத் தாண்டி நடந்தாள். வீட்டிற்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாள்.
அடுத்த நாள், செய்தித்தாளில் ஒரு பயங்கரமான செய்தியைப் படித்தாள், அவள் நடந்து வந்த அதே குறுக்குச் சந்தில், முன் தினம் மாலை ஒரு சிறிய பெண் பலாத்காரம் செய்யப் பட்டாள் என்பது தான் செய்தி. துக்கத்தில் மூழ்கியிருந்த இந்தச் சிறுமி பயந்து போய் அழ ஆரம்பித்தாள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்றாள்.
அந்த மனிதனை அடையாளம் காண்பிக்க முடியும் என்ற தைரியத்துடன் அங்குச் சென்று தன் கதையைச் சொன்னாள். காவல் நிலையத்தில் வரிசையாக நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதிலிருந்து முன் நாள் மாலை அவள் பார்த்த மனிதனை அடையாளம் காட்ட முடியுமா என்று காவலர் கேட்டார்.
அவள் அதற்கு ஒத்துக் கொண்டு அவனை அடையாளம் காட்டினாள். அந்த மனிதன் உடனடியாகத் தன் தப்பை ஒத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.
காவல்துறை அதிகாரி அவளுடைய வீரமான செயலுக்கு நன்றி கூறி, ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அதற்குச் செல்வி, “அவன் ஏன் என்னை ஒன்றும் செய்யவில்லை” என்று வியப்புடன் கேட்டாள். அந்த மனிதனைக் கேட்டபோது அவன் சொன்ன பதில் “அவள் தனியாக இல்லை, இரண்டு உயரமான மனிதர்கள் அவளின் இரு பக்கமும் இருந்தார்கள்.”
இது தான் பிரார்த்தனைக்கு இருக்கும் சக்தி
நம்பிக்கை இருந்தால் மலைகள் கூட நகரும். கடவுள் எப்பொழுதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தால், எந்தச் சமயமும் அவர் காப்பாற்றுவார். அவர் நம் ஹ்ருதயத்தில் எப்பொழுதும் இருக்கின்றார். அதிகமான அன்பை எல்லா சமயத்திலும் பொழிவார். துன்பங்கள் வரும்போது, மனதளவில் உண்மையாக வேண்டிக் கொண்டால், அவர் நம் உதவிக்குக் கட்டாயமாக வருவார்.

Tuesday, 27 April 2021

🔥சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் !(27/4/21)🔥 🔥அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 🔥எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், 🔥




 மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

🔥மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
🔥எங்கும் இல்லாத சிறப்பாக இங்குக் கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதையெனப் பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகச் சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.


🔥மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாகப் பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
🔥அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாகப் போகக் கடவாய்!) எனச் சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்குச் சாபவிமோசனம் கொடுப்பார்' எனச் சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.
🔥சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரிலிருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.
🔥கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...எனப் பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
🔥பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டுக் கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
🔥ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்குத் தல்லாகுளத்தை விட்டுக் கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
🔥ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காகச் சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டுத் தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்குத் தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர்,
🔥ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்தில் உள்ள சேதுபதிராஜா மண்டபம்வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
🔥காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
🔥ஓம் நமோ நாராயணாய போற்றி🔥

🙏🔥🐴🐴பாண்டி முனீஸ்வரர் 🐴🐴🔥🙏


 மதுரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் பாண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு பெருமைக்குரிய தலம். 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார்

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராகக் குடிகொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.
காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலன், கண்ணகியை மணந்து இன்ப மாக வாழ்ந்தான். இதற்கிடையே ஆடலரசி மாதவி மேல் மோகம் கொண்டு அங்கேயே தங்கினான். இதன் காரணமாகக் கோவலன், செல்வத்தை எல்லாம் இழந்தான். அப்போது ஒருதடவை மாதவி இந்திர விழாவில் கானல் வரி பாடலைப் பாடினாள்.
இதன் உட்பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை பிரிந்து, கண்ணகியிடம் மீண்டான். அதன் பிறகு கோவலன் வணிகம் செய்யும் பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான்.
அங்குக் கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி, கோவலன் மதுரை கடைவீதிக்கு சென்றான். அப்போது பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன், கோவ லன் மேல் பொய்ப் பழி சுமத்தினான். அதனை மன்னன் நம்ப, கோவலன் கொலை செய்யப்படுகிறான்.
இந்த நிலையில் கணவன் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கண்ணகி நேராக அரண்மனைக்கு சென்றாள். மன்னனிடம் நியாயம் கேட்டாள். அப்போது, “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான். அதற்கு கண்ணகி “என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான். இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.
இதனை கண்டு அதிர்ந்த பாண்டிய மன்னன் “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான். அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானிடம் சென்றது. அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.
இதனை கேட்ட பாண்டிய நெடுஞ்செழியன், ‘எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம். என்னை பூஜித்து மானிடர்கள் வழிபடட்டும். நான் அவர்களை காத்து அருளும் பொருட்டு, எனக்கு தீய சக்திகளை வெல்லும் வரம், தீயவர்களை கொல்லும் வரம், நம்பியவர்களுக்கு அருள்புரியும் வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசி கூறினார். அதன் பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார்.
இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள்- பெரியசாமி தம் பதியர் கரூரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் தங்கினர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன். அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், அன்னாரின் குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப் பேன்” என்று கூறி மறைந்தார்.
அதன் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி வள்ளியம்மாள் கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, அங்கே மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு சுவாமி சிலை சம்மணம் இட்ட தவக்கோலத்தில் கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து வைத்து கும்பிடத் தொடங்கினார் கள். அப்போது பாண்டி முனீஸ்வரர் ஒருதடவை நேரில் காட்சி தந்து, ‘நான் வெயிலில் காய்கிறேன். மழையில் நனைகிறேன்’ என்று கூறினார்.
அடுத்த நாளே பனை ஓலையால் குடிசை அமைத்து, அங்கு பாண்டி முனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார். முனிவர் வேடத்தில் சிவன் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். இங்கு உலகின் பிற காவல் தெய்வம் போல அல்லாமல், முனீசுவரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.
இவர் குழந்தை இல்லாதோருக்கு மழலை வரம் தருவது முதல் பேய்& பிசாசு பிடித்தவருக்கு நிவர்த்தி தருதல் வரை, அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். சிறப்புகள்: இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.
இப்போதும் நிறைய பக்தர்கள் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் முதியவர் வேடத்தில் தான் பாண்டி முனீஸ்வரர் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். துயரங்களோடு வரும் உண் மையான பக்தர்களுக்கு வெறும் சிலையாக மட்டும் இன்றி நேரில் வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று மன பாரங்களை கொட்டுங்கள். உங்கள் துயரங்களில் இருந்து நிச்சயம் பாண்டி முனீஸ்வரர் காப்பார்.
பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது. பூஜையின்போது எப்போதும் கூட்டம் அலைமோதும். பாண்டி முனீஸ் வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன. பாண்டி முனீஸ்வரர் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி முனீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார்கள். கருணை உள்ளம் கொண்ட அவர் மழலைச்செல்வம் கொடுக்கிறார். பல்வேறு வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் கோவிலில் காணிக்கைகளாக செலுத்திய மணி அங்கு குவிந்து கிடப்பதை காணலாம்